தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மற்றும் சித்தியடைத் தவறிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அதிபர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி !

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 162 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் எடுத்து எமது பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்த எமது மாணவச் செல்வங்களுக்கும் மற்றும் தமது அயராத முயற்சியின் காரணமாக162 புள்ளிகளுக்கு அண்மித்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இது உங்களது வாழ்க்கையின் முதலாவது அரசாங்க பரீட்சையாகும். இது உங்களுக்கு ஒரு ஆரம்பமே அல்லாமல் முடிவு அல்ல. ஆகவே இதை ஒரு படிப்பினையாக கொண்டு எதிர்காலத்தில் நீங்கள் தோற்றக் கூடிய சகல பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஒரு நல்ல பிரஜைகளாக வாழ எனது பிரார்த்தனைகள் என்றென்றும்.

உங்களுக்கு இந்தத் பெறுபேகளை பெறுவதற்கு உறுதுணையாக இருந்து தமது கால நேரங்களை செலவழித்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஜனாப் எச்.எம்.இர்ஷாட் அவர்களுக்கும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜனாப் எம்.ஏ.றிஸ்னி அஹமட் அவர்களுக்கும், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் கல்வி குழு உறுப்பினர்களான ஜனாப் எம்.ஆர்.றிசாட் றாசீக் அவர்களுக்கும் , ஜனாப் எம்.என்.மொஹமட் நப்fரின் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மற்றும் எமக்காக பிரார்த்தித்த எல்லா நல் உள்ளங்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஜஸாக்கல்லாஹு ஹைரா


.எம்.ஹலீம் மஜீத்
அதிபர்,
ஜீலான் மத்திய கல்லூரி,
பாணந்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *