பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
!!”Happy elders day and children’s day”
சிறுவர்களுக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கும் வாழ்த்துக்கள்
சிறியவர்களுக்கு அன்பு காட்டாதவனும் முதியோருக்கு மரியாதை செய்யாதவனும் என்னைச் சார்ந்தவர் அல்ல’ (நபி முஹம்மத் ஸல் அவர்களது கூற்று)
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் மற்றும் சிறுவர் தினம் இன்று உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துகள்.அதேநேரம் இன்று உலகளவில் மியன்மார், கஷ்மீர், சிரியா, பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளால் இன்னல்களையும் துன்பங்களையும் சந்தித்து கொண்டு வாழும் சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும்மற்றும் தனது பெற்றோர்களை இழந்து வாழும் அனாதைச் சிறுவர்களுக்கும் முதியோர் இல்லங்களில் முடங்கி கிடக்கும் முதியோர்களுக்கும் எமது அனுதாபங்களைப் தெரிவித்து கொள்கின்றோம். அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி வஸ்ஸலாம்.











