The Greetings from the Principal for G-5 pupils

BISMILLAHIR RAHMANIR RAHEEM
Assalamu alaikum warahmatullahi wabarakatuh

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அதிபரின் வாழ்த்துச் செய்தி !

2020 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடைபெற இருக்கின்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 331694 பரீட்சாத்திகள் தோற்றவுள்ள இச்சந்தர்ப்பத்தில் எமது பாடசாலையிலிருந்து 150 மாணவ மணிகள் இப்பரீட்சைக்கு தோற்ற உள்ளனர், என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவிப்பதுடன், இவர்கள் இப்பரீட்சைக்கு சிறந்த முறையில் தோற்றி மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

அத்துடன் இவர்களை தயார்படுத்திய ஆசிரிய பெருந்தகைகளுக்கும், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் மற்றும் அங்கத்தவர்களுக்கும், பழைய மாணவசங்க அங்கத்தவர்களுக்கும் எனது இதயம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

ஜஸாக்கல்லாஹு ஹைரா

.எம்.ஹலீம் மஜீத்
அதிபர்,
ஜீலான் மத்திய கல்லூரி,
பாணந்துறை.